இலக்கியச்சோலை

சாதனை கல்வியலாளர்கள், மாணவர்களுக்கு கௌரவமளித்த “மீஸானின் மரகதங்கள் சீசன் த்ரி” ! ….

இலங்கை கல்வியியலாளர் சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்களையும், கல்வியலாளர்களையும், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களையும், பிபா சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம். ஜப்ரான் அவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் அல்-மீஸான் பௌண்டஷனின் “மரகதங்கள் சீசன் த்ரி” நிகழ்வுகள் அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான நூருல் ஹுதா உமர் தலைமையில் கல்முனை அல்- அஸ்ஹர் அரங்கில் விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் நட்சத்திர அதிதியாக மாற்றத்திற்கான சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்த்திட்ட ஆலோசகரும், அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை உறுப்பினருமான இப்திகார் றிசாத் ஷெரீப் அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் களான பி. ஜிஹானா ஆலீப், எம்.என்.ஏ. மலிக், எம்.எல்.எம். முத்தரிஸ், யூ.எல்.சாஜித், யூ.எல். றியால், அஸ்மா அப்துல் மலிக், ஏ. சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விசேட அதிதிகளாக சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், பொறியியலாளர் கமால் நிஷாத், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விமான்கள், கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓய்வுபெற்ற அதிபர் யூ.எல். நஸார், கல்வியலாளர் சேவைக்கு கல்முனை பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட எம்.ஐ.எம். அஸ்மி, ஏ.ராஸீக், ஏ.சி.எம். மபாஸ், எம்.ஆர்.எம். நௌசாத், எம்.ஏ. அஸ்வர், ஏ.எம்.கே. முபாரக், சிஹானா ஏ கரீம், பிபா சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம். ஜப்ரான் ஆகியோர் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சிலர் கௌரவிக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *