உலகம்

இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அவுஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கைகை புதுப்பித்துள்ளது.

இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், இலங்கைக்கான பயண ஆலோசனையை மதிப்பாய்வு செய்ததாகவும், அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்துவதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் நுழைய, அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) வடிவில் விசா தேவைப்படும் என்றும் அந்த ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து சேரும்போது மின்னணு பயண அனுமதியை பெறுவதற்கு குறைந்த வசதிகள் இருப்பதால், பயணம் செய்வதற்கு முன்னர் இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும்,” என்று பயண ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *