இலங்கை
ரணிலின் பிரித்தானியா விஜயம் தொடர்பில் விசாரணையைத் தொடங்கிய CID

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வெளிவிவகார அமைச்சில் பணியாற்றிய 2 அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
![]()