இலங்கை

குழப்பத்தில் இருக்கும் அநுர; தனது நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கே தெரியாது! விமர்சித்த நாமல்

பெறப்பட்ட மற்றும் இன்னும் நிலுவையில் உள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (FDI) பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான விளக்கத்தை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனதுX இல் பகிரப்பட்ட ஒரு பதிவில், ஜனாதிபதி மற்றும் மூத்த அமைச்சர்கள் வெளியிட்ட முரண்பட்ட அறிக்கைகளை ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.

“ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்தில் முழு குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனது அரசாங்கம் 96 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்ததாக ஜனாதிபதி ஆரம்பத்தில் கூறியிருந்தாலும்,

அவரது அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அந்த எண்ணிக்கை 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறினார்,

பின்னர் ஜனாதிபதி தனது அறிக்கையை திருத்தி, இந்த ஆண்டு இதுவரை தனது அரசாங்கம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், இந்தத் தொகை இன்னும் நாட்டிற்குள் நுழையவில்லை.

இந்த முரண்பாடான அறிக்கைகள், ஜனாதிபதி முழுமையான குழப்ப நிலையில் இருப்பதாகவும், தனது சொந்த நிர்வாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாது என்பதையும் தெரிவிக்கின்றன என நாமல் குறிப்பிட்டார்.

https://x.com/RajapaksaNamal/status/1936718629858427159

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *