இலங்கை

மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரியாக மாறியுள்ள சிறைச்சாலைகள்! 

ஊழல், மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறிவருகின்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் வடமாகானத்தைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மக்களுக்கான ஜனாதிபதி நிதியத்தையும் பெரும் புள்ளிகளே கடந்த காலத்தில் பெற்றுள்ளனர். தற்போதுதான் அதனை தேவையுள்ள மக்களுக்கு உரிய வகையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொருவராக சிறைச்சாலைக்கு செல்கின்றனர்.

எதிர்காலத்தில் இந்நாட்டிலுள்ள பெருவாரியான அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறக்கூடும்.

கடந்த காலங்களில் ஜனாதிபதிகள்கூட இரு சம்பளங்களை பெற்றுவந்தனர். எம்.பிக்களாக இருந்ததற்குரிய சம்பளத்தையும் பெற்றனர். ஆனால் எமது ஜனாதிபதி அவ்வாறு செயற்படுவதில்லை – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *