உலகம்

அமெரிக்காவின் நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு உயர் எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

டெல் அவிவ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை,ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்க தாக்குதல்களைக் வன்மையாக கண்டித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதன் ஊடாக ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கடுமையாக மீறியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் உள்ளிட்ட நகரங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் போன்ற முக்கிய நகரங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *