அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பிரபாகரனுடனும் அநுர கூட்டு சேர்வார்

கரண்ணாகொட விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குற்றவாளியாக்கப்பட்டுள்ள நபரை தேசிய மக்கள் சக்தி குருநாகல் மாநகர சபை பிரதி மேயராக நியமித்துள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கு பிரபாகரனுடனும் கூட்டணியமைக்கும் நிலைக்கு அநுர அரசு தள்ளப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளையின் பிரகாரம் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்லேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணைத்து ஐக்கிய மக்கள் சக்தி உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதாக அரச தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.குருநாகல் மாநகர சபை மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி மேயராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பிரான அசாப்தீன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மீது பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கரண்ணாகொட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் அசாப்தீன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்துமா?, அதிகாரத்துக்காக பிரபாகரனுடனும் கூட்டணியமைத்துக் கொள்ளும் நிலைக்குஅநுர அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என்றார்.
![]()