உலகம்

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உணவுப் பொருட்களுக்காக காத்திருந்தவா்கள் உட்பட சுமார் 43போ் உயிரிழந்தனா்.

மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானவா்கள் காந்திருந்தபோது அவா்களை நோக்கி இஸ்ரேல் படையினா் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 35 போ் உயிரிழந்ததாக அல்-அவ்தா வைத்தியசாலை கூறியுள்ளது.

இது தவிர, டேய்ர் அல்-பாலா நகரிலுள்ள ஒரு குடியிருப்பின் மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் 8 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *