உலகம்

நைஜரில், ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 34 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்காபிரிக்க நாடான நைஜரில் ஆயுதக் குழுக்களுக்கும், இராணுவத்துக்கும் மோதல் நடந்து வரும் நிலையில், அங்கு பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி போர் நடந்து வருகிறது.

மாலி மற்றும் புர்கினா பஸோ ஆகிய நாடுகளுடனான எல்லையில் பனிபங்கோ என்ற நகரத்தில், 200க்கும் ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கிருந்த இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 34 இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு மேலும் 14 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நைஜரின் பாதுகாப்புத் துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 12க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *