இலங்கை

செம்மணி படுகொலை போராட்டம் – அனைவரும் ஒன்றிணைக!

யாழ்ப்பாணம் – செம்மணி படுகொலைக்கு நீதி கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி வருகின்ற 23, 24,25 ஆகிய நாட்களில் அனைத்து தமிழ் மக்களும் எம்மோடு இணைந்து விளக்கு ஏந்தி போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு” என்ற கருப்பொருளில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *