உலகம்

ஈரான் வௌியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் வரை, தனது அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், ஈரானுடனான நீண்டகால மோதல் குறித்து எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் இந்த அறிக்கையை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தளபதி ஈயல் சமீர், தனது நாடு நீண்டகால மோதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், இது எதிர்காலத்தில் கடினமான காலங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தற்போது ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஜெனீவாவில் ஐரோப்பிய இராஜதந்திரிகளைச் சந்தித்தார்.

இதன்போது, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

எனினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்திய பின்னரே, ஈரான் இராஜதந்திர நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அரக்சி தெரிவித்தார். மேலும், ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது என்றும், இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *