இலங்கை

நல்லூர் பிரதேசசபையின் திண்மக்கழிவுகள் உடனே அகற்ற வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகாமையில் நல்லூர் பிரதேச சபையினால் கொடடப்படும் திண்மக் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று  நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்  குப்பை சேமிக்கும் இடத்தில் மருத்துவ, இலத்திரனியல், இரசாயன , பொலித்தீன்,  பிளாஸ்டி உள்ளிட்ட  கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு சமூக சீர்கேட்டை உருவாக்கியுள்ளனர்

அப்பகுதி மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசியும் நிலத்தடி நீரை சுத்தமாக குடிக்க முடியாமலும் நிம்மதியாக உறங்க முடியாமல் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

எனினும் இதுவரையிலும் காத்திரமான முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில் ஒரு வாரத்திற்கு முதல் அப்பகுதி திண்மக்கழிவுகள் இனந்தெரியாதோரால் எரியூட்டபட்ட நிலையில் மாவட்ட செயலகத்தின் முன்பு ஊர் மக்கள் சமூக செயற்பாட்டாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அரச அதிபரிடம் மனு கையளிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை சட்டத்தரணி நவநீதன் அவர்களால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேற்படி பிரச்சனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக் கூடிய வகையில் காணப்படுகின்றமைதொடர்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

விசாரணையை யாழ்ப்பாணம் நீதவான்  நீதிபதி லெனின் குமார் முன்னெடுத்திருந்த நிலையில்  குப்பைகள் கொட்டப்படக் கூடாது எனவும் அங்கிருக்கும் குப்பைகளை பிறிதொரு இடத்திற்கு அகற்றப்பட வேண்டும் என்றும் அதிரடி தடையுத்தரவு பிறப்பித்தார்.

கோவிலுக்கு அருகாமையில் குப்பை கொட்டப்படுகின்றது என்று  கடந்த  வாரம் (09) சமூக செயற்பாட்டாளர்களான லோ.கோகிலன்,  த.சித்தார்த்தன் , பி.வத்சாங்கன்,  சி.சிவசங்கர்,  வ.நவநீதன் ஆகியோரால் சட்டத்தரணி நவநீதன்  ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *