இலங்கை

தமிழரசுக்கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி கூட்டு ஆட்சி – சந்தர்ப்பவாத தமிழ்த்தேசிய விரோதம்!

சுமந்திரனுடன் தமிழரசுக்கட்சி சார்பில் ஒப்பந்தம் செய்துள்ளமை திரு.க.வி.விக்னேஸ்வரனின் சந்தர்ப்பவாத தமிழ்தேசியவிரோத சக்திகளுடனான வங்குரோத்து அரசியல் வியாபாரம் என்பதால் மிகவும் ஏமாற்றத்துடன் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். இவ்வாறு முன்னாள் தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்

ச.ஸ்ரார்லின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் அனுப்பப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது,

தமிழ்தேசிய பரப்பில் இவருக்காக மீன்சின்னத்தை வழங்கி பாராளுமன்றம் அனுப்பிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்காமல் யாரின் பதவிமோகத்திற்காகவும் எதற்காகவும் இந்த ஒப்பந்தம் என்பதை மான் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்தேசிய விரோத மேல்சாதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் திரு.விக்னேஸ்வரன் பிரத்தியேக ஆலோசகரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பின்னர் அதுபற்றி எதுவும் தெரியாதவர்போன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த நாடகத்தை நாம் நன்கு அறிவோம்.தமிழ்தேசிய கொள்கைபற்றுள்ளவர்கள் கட்சியிலிருந்து மட்டுமல்ல அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவது ஏன் என்பது இப்போது தெளிவாகின்றது.

தமிழ்தேசியத்தை நேசிப்பவர்களால் தமிழினத்துரோகிகளாக அடையபளப்படுத்தப்பட்ட ஈபிடீபி யினருடன் தமிழ்தேசியநலன்களை புறம்தள்ளி பதவிக்காகவும் தமிழ்தேசியம் ஒற்றுமைபடுவதை சிதைக்கும் எண்ணகருவுடன் ஒப்பந்தம் செய்த  சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான தமிழரசுக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததன்முலம் முன்னர் வி.மணிவண்ணன் முதல்வர் பதவிக்காக ஈபிடீபியுடன் இனைந்து ஆட்சியமைத்தமையை போன்று இப்போதும் தமிழ் மக்கள் கூட்டணியில் நடப்பதால் இப்படியான அரசியல் வியாபாரத்திற்காகதானோ தமிழ்தேசியகொள்கை பற்றாளர்கள் திரு.மணிவண்ணனின் உள்வருகையுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நிதர்சனமாகின்றது.

திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியபோது அவர் தமிழ்தேசிய வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என்ற பெரும்நம்பிக்கையுடன் மக்கள் ஆதரவுகாட்டினர் நாமும் அவ்நம்பிக்கையுடனே தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்காக உழைத்தோம் எனினும் முன்னர் திரு.ஆ.சுமந்திரனிடம் சூடு வாங்கிய திரு.விக்னேஸ்வரன் மீண்டும் சூடு வாங்க உள்நுழைந்துவிட்டார் நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதும். அவனே கொள்கை பற்றாளனாக மதிக்கப்படுவான் போற்றுதலுக்குரியவன்.

சூடு சொரணை இல்லாதவர்கள் எம் தமிழ்தேசியப்பரப்பில் எதற்காக? எம்வாக்குகளால் அவர்களும் அவர் சார்ந்தவர்களும் சொந்த நலன்களை அனுபவித்தது போதும். இவ்வாறானவர்களை இணங்கண்டு நீக்கிவைத்து நாம் தமிழர்களாக எம்தேசியத்திற்காக ஒன்றிணைவோம்.- என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *