உலகம்

மகனின் திருமணம் ஒத்திவைப்பு ; முட்டாள்தனமாக பேசிய நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

தனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது போருக்காக கொடுத்த விலை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக கடந்த 16 ஆம் தேதி நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

மகனின் திருமணம் ஒத்திவைப்பு ; முட்டாள்தனமாக பேசிய நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு | Netanyahu Opposition For Postponing Son S Wedding

சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

 

இந்த நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட சொரோகா மருத்துவமனையை பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் பேட்டியளித்த அவர்,

“பலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடுகின்றனர். நாம் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ளோம். எனது குடும்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

மகனின் திருமணம் ஒத்திவைப்பு ; முட்டாள்தனமாக பேசிய நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு | Netanyahu Opposition For Postponing Son S Wedding

 

அது போருக்காக நாங்கள் கொடுத்த விலையாகும். இதனால் எனது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீராங்கனையை போல் எனது மனைவி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டார் என தெரிவித்தார்.

நெதன்யாகுவின் பேச்சுக்கு இஸ்ரேல் மக்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போரின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நெதன்யாகு தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும் நெதன்யாகுவை பலர் விமர்சித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *