இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து – 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது

அண்மையில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 214 பேரின் டி.என்.ஏ பொருத்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இதுவரை 198 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி இந்தியாவின் – அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இந்த விபத்தில் சிக்கியது.

198 பேரில் 149 பேர் இந்தியர்கள், ஏழு பேர் போர்த்துகீசியர்கள், 32 பேர் பிரித்தானியர்கள் மற்றும் ஒரு கனடா நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி தெரிவித்தார்.

உயிரிழந்த 15 பேரின் உடல்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும், 183 உடல்கள் ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 222 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் 214 பேர் டி.என்.ஏ மாதிரிகள் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் எட்டுப் பேர் டி.என்.ஏ பொருத்தம் இல்லாமல் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *