உலகம்

ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்க சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (20) ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியை சந்திக்க உள்ளனர்.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கையில் சேரலாமா வேண்டாமா என்பதை இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

போரில் வாஷிங்டன் தலையீடு குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்கத்தைய நாடுகளின் இந்தப் பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன.

இதற்கிடையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ஜனாதிபதி தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் வொஷிங்டனில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, இங்கிலாந்து வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் லாமி மத்திய கிழக்கின் நிலைமையை “ஆபத்தானது” என்று விவரித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *