உலகம்

ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிவரும் மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அவுஸ்திரேலிய அரசு ஈரானிலுள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக முடுவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் பென்னி வோங் கருத்துத் தெரிவிக்கையில் ‘ ‘ஈரானில் நிலவி வரும் போர் பதற்ற நிலை காரணமாக, பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக அவுஸ்திரேலிய தூதரகம் தற்காலிகமாக மூடப்படுகின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆஸ்திரேலிய விமானங்களும் பாதுகாப்புப் படையினரும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலியர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈரானை விட்டு வெளியில் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு உதவ, அசர்பைஜான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சர் பென்னி வோங், அமெரிக்க வெளிவிவகாரச்செயலாளர் மார்கோ ரூபியோவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்ரேல் கடந்த வாரம் ஈரானின் அணு உற்பத்தி மையங்களை தாக்கியது. இதற்கு பதிலடி அளித்து ஈரானும் ஈஸ்ரேலை நுட்பமாக தாக்கியது. இந்நிலையில், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *