இலங்கை

கால்நடை ஊழலில் சிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள்

பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பாரிய மோசடிகளை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பால் மாடுகளை இறக்குமதி செய்யும் போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலம் அரசாங்கத்துக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அந்தக் காலகட்டங்களில் அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமன்றி அவர்களின் பல முக்கிய அமைச்சர்களும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மோசடியில் தொடர்புபட்ட பசில் ராஜபக்ச, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோரும் இந்த விவகாரத்தில் விரைவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள். அவர்களில் யாருக்கும் எந்த கருணையும் காட்டப்படாது என்று நிஹால் கலப்பத்தி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *