இலங்கை

ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணில்

சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கூறுகிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் (SPIEF-2025) பங்கேற்றபோது, ​​ரஷ்யாவின் முக்கிய ஊடக வலையமைப்பான Russia Today (RT) உடனான கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை Russia Today பரவலாக வெளியிட்டது.

கலந்துரையாடலின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) பொருளாதார மற்றும் அரசியல் குழுவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “பிரிக்ஸ் மேற்கத்திய உலகத்தைச் சேராத நாடுகளைக் குறிக்கிறது” என்று அவர் கூறினார், இலங்கை தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பிரிக்ஸ் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்ததை நினைவு கூர்ந்தார்.

இந்தக் கருத்துக்கள் ரஷ்யாவின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதையும், மேற்கத்திய நாடுகளை மையமாகக் கொண்டிராத புதிய உலகளாவிய சக்திகளின் வளர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன என்று Russia Today ஊடக வலையமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கூற்றுகள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் இலங்கையின் நிலைப்பாடு மற்றும் ரஷ்யாவின் பங்கு குறித்த புதிய உரையாடலுக்கு வழிவகுத்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *