கொழும்பை மூழ்கடித்துள்ள அதன் இருண்ட பக்கம்; கொழும்பு மேயர் தெரிவிப்பு

கொழும்பு இலங்கையின் பணக்கார நகரமாக இருந்தாலும் அதன் இருண்ட பக்கம் இப்போது கொழும்பை மூழ்கடித்துள்ளதாகவும் கொழும்பு நகரத்தில் வாழும் மக்களுக்கு வெளிச்சம் வழங்குவதில் தனக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியேற்றுள்ள விராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் மேயராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேசிய மக்கள் சக்தியின் விராய் கெலி பல்தசார் திங்கட்கிழமை (16)தெரிவு செய்யப்பட்டார்.
நேற்று புதன்கிழமை காலை கொழும்பு மாநகர மேயராக பதவியுற்றார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே விராய் கெலி பல்தசார் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் பங்கேற்புடன் கொழும்பின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென நம்புகின்றேன். கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை.
எனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும். இந்த நகரத்தையும் மாற்றுவோம் என்று குடிமக்கள் குரல் எழுப்பியுள்ளனர். இந்த நகரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
கொழும்பு இலங்கையின் பணக்கார நகரமாக இருந்தாலும், அதன் இருண்ட பக்கம் இப்போது கொழும்பை மூழ்கடித்துள்ளது. நகரத்தில் வாழும் மக்களுக்கு வெளிச்சத்தை கொடுப்பதில் எனக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
ஒழுங்கற்ற திட்டங்கள் காரணமாக கொழும்பில் பல பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.
கொழும்பு நகரத்தை உலகின் மிகவும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும்.கட்சி அல்லது நிற வேறுபாடின்றி 117 உறுப்பினர்களின் கூட்டுப் பணியிலேயே வெற்றி அடங்கியுள்ளது. எனவே அனைவரும் ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
![]()
//மக்களின் பங்கேற்புடன் கொழும்பின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென நம்புகின்றேன். கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை.//
//கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை.//
ஒரு அறிவார்ந்த தலைமைத்துவம் தனது பொறுப்பை தனக்ககிடப்பட்ட மக்களின் ஆணையாகவும் தொண்டாகவுமே கருதும் இஅதனை தனிப்பட்ட பெருமையாக ஒரு போதும் எடுத்துக் கொள்ளாது.
அதற்குச் சான்றாக இருப்பது .கொழும்பு மாநகர மேயரின் மேலே உள்ள கருத்துக்களாகும்.