உலகம்

ஈரான் மீதான தாக்குதலுக்கு 20 முஸ்லிம் நாடுகள் கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாக 20 அரபு, முஸ்லிம், ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்த நாடுகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளன.

ஈரானில் இஸ்ரேல் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. சா்வதேச சட்டங்களுக்கும், ஐ.நா.வின் வழிகாட்டுதல்களுக்கும் எதிராக ஈரானின் அணுசக்தி மையங்களிலும், இராணுவ தளங்களிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இந்த தாக்குதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே பதற்றம் நிலவிவரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

எனவே, தாக்குதலைக் கைவிட்டு இரு நாடுகளும் போா் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஈரானின் அணுசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதால் அணுக் கதிா் வீச்சு பரவும் அபாயம் உள்ளது. எனவே, அந்த மையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே தடைபட்டுள்ள அணுசக்தி பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னைக்கு அமைதி முறையில் மட்டுமே தீா்வு காண முடியும்.

மத்தியக் கிழக்குப் பிராந்தியம் அணு ஆயுதமற்ற பகுதியாக இருக்க வேண்டும் என்பதே அரபு நாடுகளின நீண்டகால நிலைப்பாடு.

அந்த நிலையைத் தொடர்வதற்கான அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி, எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா, பாகிஸ்தான், கட்டார், ஓமன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஈராக், அல்ஜீரியா, பஹ்ரைன், புருணே, சாட், கொமரோஸ், ஜிபூட்டி, குவைத், லிபியா, மொரிடானியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்தக் கூட்டறிகையை வெளியிட்டுள்ளனா்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *