இலங்கை
பிரம்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மீது மீண்டும் தாக்குதல்

பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கனடிய தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது.
பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றமை குறித்து கனடிய தமிழர் தேசிய அவை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.
தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த நினைவுத் தூபியின் மீது மே 27ம் திகதி இரவும் இவ்வாறு வேண்டுமென்றே சேதப்படுத்தும் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
![]()