இந்தியா

நடு வானில் எஞ்சினில் கோளாறு – கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடு வானில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், மிகவும் சாதுர்யமாக செயற்பட்ட விமானி குறித்த விமானத்தை பத்திரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று பயணித்துள்ளது.

இந்நிலையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தின் இரண்டு” எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டுள்ளது. எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி உணர்ந்தார்.

தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி கொல்கத்தா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சுமார் ஐந்து மணி நேர காத்திருப்பிற்கு பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமாம் விபத்துக்குள்ளானத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *