உலகம்

இஸ்ரேல் – ஈரான் போர்!! லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு லெபனான் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன் இருக்கவும் பாதுதுகாப்புடன் இருக்கவும் லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நெரிசலான இடங்களுக்குச் செல்வதையும், இரவு நேர நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் பங்கேற்பதையும் தற்காலிகமாக நிறுத்தவும், நீண்ட தூரப் பயணங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் செல்லும்போது தங்கள் லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் புகைப்பட நகலை எடுத்துச் செல்லுமாறும் இலங்கையர்களுக்கு லெபனான் தூதரகம் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *