முகநூல்

அகமதாபாத் விமான விபத்து!

அகமதாபாத் விமான விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
விமானத்தின் உள் கட்டமைப்பு மிக மோசமான நிலையில் இருக்கிறது, இருக்கைகளில் பொருத்தப்பட்டிருக்கும் தொடுதிரை கணினிகள் வேலை செய்யவில்லை,
விமானத்தினுள் குளிர்சாதனம் இயங்காதால் பேப்பரைக் கொண்டு பயணிகள் விசிறிக் கொண்டு இருக்கின்றனர் என வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
உயிர் பிழைத்த நபரோ விமானத்தில் பெரிய சத்தம் ஒன்று கேட்டது. அதன் பிறகு விமானம் சடார் என தரையில் இறங்கி மோதி விட்டது என பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
விமானத்தில் எமர்ஜென்சி கேட் அருகே இருக்கும் 11 A சீட்டில் அமர்ந்திருந்ததால் விமானம் விபத்துக்குள்ளாக போவதை அறிந்து எமர்ஜென்சி கதவை திறந்து கீழே குதித்து உயிர் தப்பியதாக விஷ்வாஷ் குமார் ரமேஷ் பேட்டி கொடுத்துள்ளார்.
ஆனால் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறப்பது அவ்வளவு எளிதா எனக் கேட்டால், விமான பயணத்தின் நடுவில் அவசரக் கதவைத் திறப்பது எளிதல்ல.
ஏனெனில் கதவுகள் வெளிநோக்கித் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கேபினுக்கும் வெளிப்புறக் காற்றுக்கும் இடையிலான அழுத்த வேறுபாட்டை தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட அந்த கதவை நினைத்த நேரத்தில் திறந்து விட முடியாது.
தவிர அப்படி திறக்க வேண்டும் என்றாலும் அந்த கதவானது விமானத்தின் வெளிநோக்கி தான் செல்லுமே தவிர உள்நோக்கி வராது. அவ்வாறு அந்த கதவை திறந்தால் வெளியில் உள்ள காற்று விமானத்தினுள் வந்து விமானத்தை தாறுமாறாக தாக்கி நிலைகுலைய செய்து விடும்.
இதனால் பறக்கும் போது அவற்றைத் திறப்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமாகிறது. யாராவது போதுமான சக்தியைப் பயன்படுத்த முடிந்தாலும், விமானம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும் கதவுகள் பொதுவாக பூட்டப்படும்.
சரி..! முறையான பயிற்சி இல்லாமல் விமானம் பறக்கும் பொழுது அந்த கதவை திறக்க முடியுமா என கேட்டால்,
இல்லை..!
பொதுவாக முன் பயிற்சி அல்லது குறிப்பிட்ட பயிற்சி இல்லாமல் விமானத்தின் நடுவில் அவசரக் கதவைத் திறப்பது சாத்தியமில்லை. பறக்கும் போது கேபினில் ஏற்படும் அழுத்தம் கதவை வெளிப்புறமாகத் தள்ளும் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியை உருவாக்குகிறது.
இதனால் ஒரு நபர் அழுத்தத்தைக் கடந்து அதைத் திறக்க முடியாது.
தவிர அவசர வழி கதவை பயன்படுத்தும் லீவரை பிடித்து இழுத்தால் அந்த முயற்சியானது விமானியின் அறையில் விமானிக்கு எச்சரிக்கை கொடுக்கும்.
உடனடியாக பணிப்பெண்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்வார்கள். இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் தரை இறங்கிய விமானத்தில் தான் எமர்ஜென்சி கதவுகள் வேலை செய்யும்.
விமான விபத்தில் தப்பித்த நபர் பேட்டி கொடுத்திருப்பது போல் அவசர கதவை திறந்து குதிப்பது என்பது சினிமாவை வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாமே தவிர நிஜத்தில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறது அறிவியல்.
ஒருவேளை உயிர் பிழைத்த ரமேஷ் பேட்டி கொடுத்தது போல் அவசர கதவை திறந்து இருந்திருப்பாரேயானால்… அந்தக் கதவின் வழியாக உள் புகுந்த காற்று தான் விமான விபத்தை ஏற்படுத்த வேண்டும்.
தவிர குமாரின் உயிர் பிழைப்பில் மில்லியன் டாலர் கேள்விகள் இருக்கின்றன.
ஏனெனில் கீழே விழுந்தவரின் ஆடையில் ஒரு கிழிசல் கூட இல்லை. சைக்கிளில் இருந்து விழுந்தாலே கையில் இருக்கும் செல்போன் காத தூரத்திற்கு ஓடி விடுகின்ற நேரத்தில் விமானத்திலிருந்து விழுந்த பின்னும் செல்போன் அவர் கையை விட்டு எங்கும் போகவில்லை.
பைக்கில் போகும்பொழுது நாமாகவே வழுக்கி கீழே விழுந்தாலும் எழுந்து உட்கார்ந்து பத்து நிமிடங்களுக்கு என்ன நடக்கிறது என்பது நமக்கு புரியாமல் இருக்கும். சகஜ நிலைக்கு வருவதற்கு குறைந்தது கால் மணி நேரமாவது ஆகும்.
ஆனால் குமார் எந்த பதட்டமும் இல்லாமல் அவரது தகப்பனாருக்கு போன் செய்து என்ன நடந்தது என்பதை விலாவாரியாக விளக்கி இருக்கிறார். மிக பதட்டமான சூழ்நிலையில் இதெல்லாம் சாத்தியமா?
வெறும் 25 அடி உயரத்தில் இருந்து குதித்தாலே எலும்புகள் நொறுங்குகின்ற சூழ்நிலையில் அதற்கு மேலான உயரத்தில் இருந்து குதித்த குமாருக்கு ஏன் கால்களில் எந்த இடத்திலும் சிறு சுளுக்கு கூட ஏற்படவில்லை?
மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்த நபர் எந்த பதட்டமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடந்து செல்வதெல்லாம் நம்பக்கூடிய விஷயங்களா?
எனவே எமர்ஜென்சி கதவு குறித்து குமார் சொல்லும் கதையை அதிகாரிகள் அப்படியே நம்பாமல் ஆராய்ந்து பார்த்தால் அதற்கு பின்னே ஏதோ ஒரு தீவிர மர்மம் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்படலாம்.
ஒருவேளை இறந்தவர்களில் யாரும் விசாரணை அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் இல்லை என்பதால் அதிகாரிகள் விசாரணையில் அலட்சியம் காட்டினால்,
விமான பயணத்தை தொடங்கும் முன்,
விமான டிக்கெட்டை பத்திரமாக கையில் வைத்திருக்கிறோமா என பரிசோதித்துக் கொள்வது போல்,
விமானத்தில் ஏறி பறந்து பத்திரமாக பூமி வந்து சேர்ந்து விடுவோமா என ஒரு முறை கிளி ஜோசியம் பார்த்துக் கொள்வது நல்லது.
எது எப்படியாக இருந்தாலும் விமானம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்கிற உண்மை மட்டும் புலப்படுகிறது.
சாதாரண ஏசி ஸ்லீப்பர் கோச் பஸ்களே ரதமாய் மின்னிக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் காணொளியில் காட்டப்பட்ட விமானத்தின் உள்கட்டமைப்பு உள்ளூர் பப்ளிக் டாய்லெட்டுகளின் நிலையை விட மிகவும் கேவலமாக இருக்கிறது.
ஒரு விமானத்தை விமானி நினைத்த நேரத்தில் இயக்கி விட முடியாது. அதனுள் இருக்கும் தானியங்கி இயந்திரம் விமானத்தின் அனைத்து பாகங்களும் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்டறிந்து, அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்து பச்சை விளக்கை உமிழ்ந்த பிறகு விமானத்தைக் கிளம்ப விமானி தயாராக முடியும்.
அப்பொழுதும் கூட விமானியால் உடனே கிளப்பி விட முடியாது. அதே பச்சை விளக்கு சிமிக்ஞை விமான கட்டுப்பாட்டு அறைக்கும் வந்த பிறகு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிளம்பும் உத்தரவை ஏற்று அதன் பிறகு தான் விமானியால் விமானத்தை கிளப்ப முடியும்.
இத்தனை பாதுகாப்புகளையும் மீறி ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்றால்,
மிகப்பெரிய பறவை ப்ரொபெல்லரில் சிக்கினால் கூட இத்தகைய கோர விமான விபத்து நடைபெற முடியாது என வல்லுனர்கள் சொல்லி இருக்கின்ற கருத்தையும் மீறி அமானுஷ்யமான முறையில் ஒரு விபத்து நடந்திருக்கிறது என்றால்,
அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உயிர்களும், மருத்துவ கல்லூரி விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்களின் உயிர்களும்,
இந்த விமானத்தால் இத்தனை மணிக்கு, இந்த நொடியில், இன்ன இடத்தில் இன்ன விதத்தில் போக வேண்டும் என விதி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
மேம்போக்காகப் பார்க்கையில் இந்த கருத்து பிற்போக்குத்தனமாக தெரிந்தாலும் உண்மை அதுதான்.
இறந்து போன ஒரு உயிருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரும் என டாடா குழுமம் அறிவித்திருக்கின்ற இந்த வேளையில், அந்த இழப்பீட்டில் நூற்றில் ஒரு பங்கை விமான பராமரிப்பிற்கு என செலவழித்து இருந்தால் இந்த விபத்து ஒருவேளை நடக்காமல் போயிருந்திருக்கலாம்.
ஆனால் அதற்கும் விதி இடம் கொடுக்க வேண்டும்.
இருந்தபோதிலும் இனி ஒரு விபத்து இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கு இந்த விமான சம்பிரதாயங்களில் அலட்சியத்தன்மை காட்டிய அனைத்து அதிகாரிகளையும் களை எடுத்து வீட்டிற்கு அனுப்பினால் வருங்காலத்தில் இத்தகைய மோசமான கோர விபத்து நடக்காமல் தடுக்க முடியும்.
ஆனாலும் இறந்தவர்களின் ஓலைகளில் இவர்கள் இப்படித்தான் இறக்க வேண்டும் என எழுதி இருக்கின்ற பட்சத்தில் எமனால் மட்டுமல்ல எவனாலும் எதுவும் செய்து விட முடியாது.
நம்முடைய ஓலையில் இதுபோன்று ஏடாகூடமாக எழுதாமல் இருக்க இறைவனை தியானித்து புண்ணிய காரியங்கள் செய்து நல்லவனாக வாழ முயற்சிப்போம்.
நன்றி!
Arisi Sriram

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *