தடிகளுடன் சென்ற வன்முறைக் கும்பல் மீனவர்கள் மீது தாக்குதல்; யாழ். செம்பியன்பற்று பகுதியில் பதற்றம்

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனை மீறி அங்கு சிலர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், செம்பியன்பற்று சென் பிலிப் நேரியார் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு,மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்குச் சென்ற கும்பலொன்று அங்கிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()