இந்தியா

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களை அழைத்து நேதன்யாகு விளக்கம்

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

இந்நிலையில் ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது கவலையை வெளிப்படுத்திய மோடி, பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான இந்தியாவின் உறுதியை மோடி வலியுறுத்தினார்.

முன்னதாக, வெளியுறவு அமைச்சகம் ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியதுடன், அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட கவலையளிக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியது.

ஈரான் மீதான தாக்குதலில் சர்வதேச ஆதரவைப் பெற மோடியை நேதன்யாகு அழைத்ததாக தெரிகிறது. ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடனும் நேதன்யாகு தொலைபேசியில் பேசினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட தலைவர்களையும் நேதன்யாகு தொடர்புகொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *