இலங்கை

மத்திய கிழக்கில் பதற்றம் – திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் போர் சூழ்நிலைக்கு மத்தியில், பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மோதல் மண்டலத்தைத் தவிர்ப்பதற்காக லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய வழித்தடங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த வழித்தட மாற்றங்கள் ஐரோப்பாவிற்கான விமானங்களுக்கான விமான நேரங்களை நீட்டிக்கக்கூடும் என்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இன்று (13) லண்டனில் இருந்து கொழும்புக்கு வரும் UL504 விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தோஹாவிற்கு திருப்பி விடப்படும், அதே நேரத்தில் கொழும்பிலிருந்து பெரிஸுக்குச் செல்லும் UL501 விமானமும் குறித்த வான்வெளியைத் தவிர்ப்பதற்காக திருப்பி விடப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களை பின்வரும் இலக்கங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

1979 (இலங்கையினுள்);

+94 11 777 1979 (சர்வதேசம்);

வட்ஸ்எப் +94 74 444 1979

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *