இலங்கை
முள்ளியவளையில் திடீரென முளைத்த பௌத்த தோரணம்; இரவோடிரவாக அகற்றல்

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வைக்கப்பட்ட பௌத்த தோரணம் இனம்தெரியாதோரால் அகற்றப்பட்ட சம்பவம் புதன்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம், முள்ளியவளை கல்லூரிக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக அங்கு பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் வெசாக் தோரண அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருந்தது.
இதில், “மகிந்த தேரரின் இலங்கை வருகை மற்றும் பௌத்த மத ஸ்தாபித்தலும்” எனும் வாசகத்துடன் பதாதையொன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்கள் அந்தப் பதாதையை கிழித்தெறிந்துள்ளனர். மேலும், பௌத்த தோரணம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()