இலங்கை

யாழ். பருத்தித்துறையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்;பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம் அருகில் உள்ள பகுதியில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த, மனித மண்டையோட்டுடன் கூடிய மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 78 வயதான முதியவர் ஒருவர் காணமல் போயிருந்தார்.

ஆகவே இது அவரது எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *