இந்தியா

திருவிழாவில் அன்னதானம் உட்கொண்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இடம்பெற்ற திருவிழாவொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவிலில் உணவு சைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை பலரும் உட்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த அன்னதானத்தை தொடர்ந்து சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் விநிநோகம் செய்யப்பட்ட குடிநீரின் காரணமாகவே இப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *