இந்தியா

நம்பகமான உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறி வரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை

இந்தியாவின் பாதுகாப்புத் துறை, பெரும்பாலும் இறக்குமதி சார்ந்த மாதிரியிலிருந்து நம்பகமான உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக

கடந்த 11 ஆண்டுகளைக் கொண்டாடுவது இந்தியாவின் வலிமை, தன்னம்பிக்கை மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கௌரவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பகமான உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறி வரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை | India Defence Sector Trusted Global Exporter

பாதுகாப்பு ஏற்றுமதிகள் குறித்த சில தரவுகளைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர், ஆத்மநிர்பர் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா முயற்சிகளில் அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார்.

2014-15 ஆம் ஆண்டில் ரூ.1,940 கோடியாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2024-25 ஆம் ஆண்டில் ரூ.23,622 கோடியாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த், முதல் உள்நாட்டு பல்துறை போர் ஹெலிகொப்டர் எல்சிஎச் பிரசாந்த் மற்றும் நாட்டின் ஏவுகணை திறன்களையும் அவர் எடுத்துரைத்தார்.

பாரிய முதலீடுகளை

கடந்த 11 ஆண்டுகளில், இந்தப் பயணம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சாதனை அளவில் பாதுகாப்பு ஏற்றுமதியை ஏற்படுத்தியுள்ளது. எல்.சி.எச். பிரசாந்த், தேஜாஸ் போர் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி போன்ற உள்நாட்டு மைல்கற்கள் பாரிய முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பகமான உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறி வரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை | India Defence Sector Trusted Global Exporter

2024-25 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.2,09,050 கோடி மதிப்புள்ள 193 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இவற்றில், 177 ஒப்பந்தங்கள் உள்நாட்டுத் தொழிலுக்கு வழங்கப்பட்டன, இதன் மதிப்பு ரூ.1,68,922 கோடி ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று இது 11வது ஆண்டைக் கொண்டாடும் நிலையிலேயே இந்திய அரசாங்கம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *