உலகம்

கலிபோர்னிய ஆளுநரை விமர்சித்த ட்ரம்ப்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூசம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆளுநர் கவின் நியூசம், “லொஸ் ஏஞ்சல்சுக்கு தேசிய படையை அனுப்பிய ட்ரம்பின் நடவடிக்கை பொறுப்பற்றதாகும். இது எங்கள் துருப்புக்களுக்கு அவமரியாதையளிப்பதாக உள்ளது.

கலிபோர்னிய ஆளுநர் , லொஸ் ஏஞ்சல்ஸ்மேயர் என யாரையும் கேட்காமல், தன்னிச்சையாக தேசிய படைகளை அனுப்பி உள்ளார். இது சட்டவிரோதமானது. கலிபோர்னியா மாகாணத்தின் இறையாண்மையை பறிக்கும் செயலாகும். இதுதொடர்பாக ட்ரம்ப் மீது வழக்கு தொடருவோம்.

ட்ரம்ப் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய ட்ரம்ப், கலவரங்களைச் சமாளிக்க” தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்பி இருக்காவிட்டால் லொஸ் ஏஞ்சல்ஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும்.

இதற்கு ஆளுநர் , மேயர் எனக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் விமர்சனம் செய்து வருகிறார். அவரை கைது செய்ய கூட நான் பரிந்துரைப்பேன் ஆளுநர் கவின் நியூசம் விளம்பரத்தை விரும்புகிறார்.

அவர் மிகவும் திறமையற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *