உலகம்

கலிபோர்னியாவில் தொடரும் பதற்றம் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்ணீர் புகை பிரயோகம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2000 பேரை அனுப்புமாறு ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டார்.

மேலும் ஆவணமற்ற குடியேற்றவாசிகள் உட்பட பலர் சுற்றிவளைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு படையினரை அனுப்புவது அவசியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ள போதிலும் கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசன் உட்பட அவரது எதிர்ப்பாளர்கள்
இந்த நடவடிக்கை பதற்றங்களை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு படையினரை அனுப்பும் உத்தரவை ரத்து செய்யுமாறு நியூசன் விடுத்த கோரிக்கையையும் வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் தங்களுடைய நாட்டிற்கே அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருவதால் போராட்டம் வெடித்தது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *