நேசம் நாடும் நெஞ்சங்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு உதவி!

இலங்கையில் முன்னர் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் இந்த வாரம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு கல்வி நிதியத்தின் அம்பாறை மாவட்ட தொடர்பாளர் அமைப்பான பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் தலைவர் திரு. ந. கமலநாதன்( ஓய்வு நிலை அதிபர் ) அவர்களின் தலைமையில் கடந்த 08 ஆம் திகதி ஞாயிறன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவி பெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் நிறுவகத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் இணைந்துள்ள அன்பர்களின் ஆதரவினால், இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பாண்டிருப்பில் நடந்த இந்நிகழ்வில் மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் பொருளாளர் திரு. வே. நகுலேஸ்வரன், செயற்குழு உறுப்பினர்களான செல்வி ஞா. தர்ம்மிகா,, திருமதி க.தக்ஷா, திருவாளர்கள் யனார்த்தன், தி. ஜெயகிருஷ்ணா ஆகியோர் மாணவர்களுக்கு நிதியுதவிகளை வழங்கினர்.

தமது பிரதேச மாணவர்களின் கல்வி விருத்தியில் அக்கறை கொண்டு தொடர்ந்து உதவி வரும் அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கும் அதன் நிருவாகிகளுக்கும் பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் திரு.

ந.கமலநாதன் நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *