இலங்கை

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது?

விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்தாண்டு காலியில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஹரின் கைது செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.

Smart Youth கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி 2024ஆம் ஆண்டு ஜூன் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

மேலும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பும், அமைச்சரவை முடிவு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு தெரிவிக்கப்படுவதற்கு முன்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியை நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *