உலகம்

குடியேற்றக் கொள்கைகளால் வெடித்த போராட்டம் – பாதுகாப்பு படையை சேர்ந்த 2,000 பேரை அனுப்புமாறு ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டங்களையும் மோதல்களையும் தூண்டியுள்ளன.

இந்நிலையில் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு 2,000 தேசிய காவற்படையினரை அனுப்புமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியாவில் சட்டவிரோதத்தை நிவர்த்தி செய்ய ட்ரம்ப் பாதுகாப்பு படையினரை அனுப்புவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் வன்முறை தொடர்ந்தால் படையினரை அணிதிரட்ட பென்டகன் தயாராக இருப்பாதாகவும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்தார்.

இந்நிலையில் “ஒருபோதும் வன்முறையைப் பயன்படுத்தாதீர்கள், அமைதியாகப் பேசுங்கள்” என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ​​தென்கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸின் பாரமவுண்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையின்ர் எதிர்கொண்டனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகையும் பிரயோகிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் தங்களுடைய நாட்டிற்கே அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *