உலகம்

கொலம்பியா ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு; பிரச்சார மேடையில் அதிர்ச்சி சம்பவம்

கொலம்பியா ஜனாதிபதி வேட்பாளர் மிகுல் உர்பெல் டர்பே மீது பிரச்சார கூட்டமொன்றில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த 39 வயதுடைய எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் பொகொடாவில் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் மிகுல் உர்பெல் பங்கேற்றிருந்தார்.

அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார், முகுல் உர்பெலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *