இலங்கை

ரணிலின் தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவர அரசு முயற்சி! முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவும், மனுஷ நாணயக்காரவும் அறிமுகப்படுத்தவிருந்த தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

8 மணிநேர வேலை மணித்தியாலத்தை ரத்து செய்வதற்காக ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த சட்டமூலத்தை, மீண்டும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான மாற்றம் ஏற்படுமாயின், ஒருபோதும் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது.

தற்போது, ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுமிடத்துக்கு, அதற்கு எதிராக உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பதற்குத் தொழிற்சங்கங்களுக்கு இயலுமை உண்டு.

எனினும், குறித்த சட்டமூலத்தில் பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்வதாயின், 30 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன.

இதனூடாக தொழிலாளர்களின் உரிமைகள் வெளிப்படையாக மீறப்படுவதுடன், இது முற்று முழுதாக தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சட்டமாகும்.

தொழிலாளர் சட்டத்தின் அரசியல் நோக்கம் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது. அதற்கு அப்பால், இந்தத் திருத்தம் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடுகளுடன் தொடர்புடையது.

இதனை அரசாங்கம் கொண்டு வரமுயற்சிக்குமாயின், ஒவ்வொரு நிறுவனமாகச் சென்று இது குறித்து பிரசாரம் செய்வதற்கும் தங்களது தரப்பு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *