இலங்கை

அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இலங்கைக்கு இந்தியா ஆதரவு – சந்தோஷ் ஜா தெரிவிப்பு..!

அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இலங்கையை இந்தியா ஆதரிக்கின்றது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாடொன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மேலும் பல இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க நான் எதிர்பார்க்கிறேன்.

இது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஒரு படியாகும். இது ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உதவும்.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் உறுதியான நிலைகளை அடையும் போது, அதனூடாக அதிக இந்திய முதலீடுகளை ஈர்க்க முடியும்.

முதலில் இங்கு எழும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்திய முதலீடுகளை அதிகரிப்பது சந்தை நம்பிக்கையை வளர்க்கும் ஆற்றலையும் கொண்டிருக்கும்.

அந்த ஸ்திரத்தன்மை ஒரு பிரகாசமான மற்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட நிதியியல் சூழலை உருவாக்கும். அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இந்தியா, இலங்கையை ஆதரிக்கிறது.- என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *