இலங்கை

புலிகளை ஆதரித்த இஸ்ரேலுக்கு அரசாங்கம் ஏன் ஆதரவளிக்கிறது

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கி பயிற்சியளித்த க இஸ்ரேலுக்கு, அரசாங்கம் ஏன் ஆதரவு வழங்கி வருகின்றது ஐக்கிய மக்கள் சக்தியின்கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் கேள்வியை எழுப்பினார்

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய

அவர் மேலும் பேசுகையில்,

இஸ்ரேலின் மொசாட் எனும் புலனாய்வுப் பிரிவு விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி வழங்கியதுடன் ஆயுதங்களை வழங்கியது.இவ்வாறு நாடுகளை பிளவடையச் செய்யும், நாடுகளுக்குள் குழப்பம் விளைவிக்கக்கூடிய இஸ்ரேல் விவகாரத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப் பிடிக்கின்றது .இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குகின்றது.

இலங்கையில் யூதர்கள் இல்லாத நிலையில் இவ்வாறு நாட்டில் இஸ்ரேல் மத கலாசாரத்தை வியாபிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இஸ்ரேல் மத வழிபாட்டு தலங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது ஏன்?

இலங்கையில் நான்கு இஸ்ரேல் மத வழிபாட்டு தலங்கள் காணப்படுகின்றன .அவற்றில் இரண்டு பதிவு செய்யப்பட்டவை கொழும்பு பகுதியில் இயங்கி வரும் இரண்டு மத வழிபாட்டு தலங்களுக்கு எவ்வித பதிவுகளும் கிடையாது

இந்த விடயம் தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் ஹரிணி அமரசூரியிடம் நான் கேள்வி எழுப்பி போது குறித்த இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் பதிவு கிடையாது என்பதை அவர் உறுதி செய்து இருந்தார்

இவ்வாறான ஓர் பின்னணியில் பொலிஸாரும் விசேட அதிரப்படையினரும் எதற்காக இந்த வழிபாட்டு தலங்களை பாதுகாக்கின்றனர்? கொழும்பு 7 மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இயங்கி வரும் இந்த மத வழிபாட்டு தலங்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *