இலங்கை

செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள், சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் ஐந்து எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் தாக்கப்பட்டு இருக்கலாம் என்றும், இதுவரையில் ஆடை, அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால், வெற்று உடல்கள் ஆகவே அவை புதைக்கப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் குறித்த பகுதி பாரிய மனித புதைகுழியாக காணப்படலாம் எனும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *