உலகம்

உக்ரைன் ட்ரோன் படையை வலுப்படுத்தும் பிரித்தானியா; ஓராண்டில் 100,000 ட்ரோன்கள் உறுதி

ஏப்ரல் 2026 ஆம் ஆண்டுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் உக்ரைனுக்கு 100,000 ட்ரோன்களை வழங்குவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது.

ட்ரோன் படையை

உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது ட்ரோன்களால் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்த 100,000 ட்ரோன்கள் உக்ரைன் ட்ரோன் படையை வலுப்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.

ரஷ்ய அச்சுறுத்தல் உட்பட, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதிக ஆபத்தான, தொழில்நுட்ப ரீதியாக வலுவான இராணுவத்தைக் கட்டமைக்க வேண்டும் என கோரிக்கை பிரித்தானியாவில் எழுந்துள்ளது.

உக்ரைனின் தீவிர மேற்கத்திய ஆதரவாளர்களில் ஒன்றான பிரித்தானியா, ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மட்டுமின்றி, ட்ரோன்களால் தற்போதைய போர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனுக்கான 4.5 பில்லியன் பவுண்டுகள் இராணுவ ஆதரவின் ஒருபகுதியாக 350 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ட்ரோன்களை பிரித்தானியா உக்ரைனுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

உக்ரைன் ட்ரோன் படையை வலுப்படுத்தும் பிரித்தானியா... ஓராண்டில் 100,000 ட்ரோன்கள் உறுதி | Britain Pledges 100000 Drones To Ukraine

பிரித்தானியா அதிகரித்துள்ளது

ஜேர்மனி இணைந்து நடத்தும் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் 50 நாடுகள் பங்கேற்கும் உக்ரைன் பாதுகாப்பு தொடர்பு குழு கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி இந்த அறிவிப்பை வெளியிடுவார்.

இந்த ஆண்டு மேலும் லட்சக்கணக்கான ட்ரோன்களை வழங்குவதன் மூலம் உக்ரைனுக்கான ஆதரவை பிரித்தானியா அதிகரித்துள்ளது என்றே பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரோன் விநியோகம் மட்டுமின்றி கூடுதலாக, ஜனவரி முதல் உக்ரைனுக்கு 140,000 பீரங்கி குண்டுகளை அனுப்புவதை முடித்துள்ளதாகவும், இந்த ஆண்டு உக்ரேனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளிக்க மேலும் 247 மில்லியன் பவுண்டுகளை செலவிடப்போவதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் ட்ரோன் படையை வலுப்படுத்தும் பிரித்தானியா... ஓராண்டில் 100,000 ட்ரோன்கள் உறுதி | Britain Pledges 100000 Drones To Ukraine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *