இந்தியா

பெங்களூரு வெற்றிப் பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிண்ணத்தை வென்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களை காணும் ஆர்வத்தில் வந்த ரசிகர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும், 50இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *