உலகம்

நிலநடுக்கத்தை அடுத்து தப்பியோடிய 216 கைதிகள்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள மாலிர் சிறைச்சாலையில் குழப்பம் ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது கைதிகளில் ஒரு குழுவினர் திடீரென கதவைத் திறந்துகொண்டு தப்பிச்சென்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 சிறைத்துறை அதிகாரிகள், ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர்.

விசாரணையில், 216 கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சுமார் 80 கைதிகளை சிறைபிடித்தனர். தப்பியோடிய கைதிகளை தேடும் பணி தீவிரம முன்னெடுக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, சிந்து மாகாண அதிகாரிகள் கூறுகையில், நிலநடுக்கத்தால் சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *