இலங்கை

சோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருந்தனவா?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரட்நாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18ம் திகதிகளில் சிகப்பு லேபள்கள் கொண்ட 323 கொள்கலன்கள் எவ்வித பரிசோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது என கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

சுங்க பரிசோதனைகளை நடத்தாது அந்தக் கொள்கலன்களை விடுவிக்குமாறு தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரட்நாயக்க உத்தரவிட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமைச்சர் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள், வெடிபொருட்கள், தரம் குறைந்த மருந்துகள், ஆபத்தான பொருட்கள் இருந்திருக்கலாம் என சுங்கத் திணைக்கள தொழிற்சங்கங்கள் அண்மையில் சகுற்றம் சுமத்தியிருந்ததாக பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திலிருந்து நாட்டில் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகிள்ளதாகவும் இந்த கொள்கலன்களிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களை விடுவிக்குமாறு உத்தரவிட்ட அமைச்சருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *