இலங்கை

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இன்று இலங்கைக்கு வருகை

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும் என் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதிப் பிரதமரின் விஜயத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *