உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

மேற்கு வட கரோலினாவில் அமைந்துள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த வன்முறையில் குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிக்காரியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 01) அதிகாலை 12:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கட்டாவ்பா கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

மேலும், 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஷெரிப் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து வட கரோலினா மாநில புலனாய்வுப் பிரிவு மற்றும் ஹிக்கோரி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த சம்பவத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவும் உதவி வருகிறது.

இதுவரை எந்த கைதுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *