உலகம்

இஸ்ரேல் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதி உயிரிழப்பு!

லெபனானில், இஸ்ரேல் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், லெபனானின் நபதியா மாகாணம் டிர் இஸ் சஹ்ரானி பகுதியில் உள்ள சாலையில்  கார் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது அந்த காரை குறிவைத்து இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் காரில் பயணித்த ஹிஸ்புல்லா பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

இதேவேளை, கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல்லா ஏவுகணை, ராக்கெட் பிரிவின் தளபதியாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *