பலதும் பத்தும்

12 ஆண்டுகள் கழித்து 3 ராசிக்களுக்கு ஜெக்பொட்!

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மரியாதை, கௌரவம், தன்னம்பிக்கை, அரசு வேலை ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். இந்த சூரியன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஜூன் மாதத்தில் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். ஏற்கனவே இந்த மிதுன ராசியில் தேவர்களின் குருவான குரு பகவான் பயணித்து வருகிறார். சூரியனும், குரு பகவானும் ஒன்றிணைவது மிகவும் சிறப்பான நிகழ்வு. இந்த அற்புதமான சேர்க்கை ஜூன் மாதத்தில் சுமார் 12 வருடத்திற்கு பின் நிகழவுள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

இருந்தாலும், இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக 3 ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வும், பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது மிதுன ராசியில் ஒன்றிணையும் குரு சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி 

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியையும், நிதி நன்மைகளையும் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். கூட்டு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலருக்கு வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

துலாம் 

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுபெறும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும்.

மீனம் 

மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். சிலருக்கு வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும்.

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். தாயுடனான உறவு வலுவடையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *